இன்று நமது அறக்கட்டளை மற்றும் சாலை பள்ளியின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். இந்நாளில் எனது சிந்தனை: 1 மருத்துவர்ராக வாழ்வு துவங்கி,இந்திய இராணுவத்தில் கடமையாற்றி,சென்னை பல்கலைகழகத்தில் முத்திரை பதித்து சாலை பள்ளிக்கு வித்திட்ட அமரர் மருத்துவர் கோவிந்தராஜன் அவர்களின் நினைவு நாள். 2. அவர் எண்ணிய பெண் கல்வியை 33 ஆண்டுகள் வெற்றிகரமாக அளித்து வரும் ஆசிரியைகளுக்கு எனது வாழ்த்துக்கள், இது இன்று நாம் அவருக்கு காணிக்கையாக்கும் மலர் மாலை. 3. செல்வத்தில் நிகரற்ற செல்வம் கல்வி என்பதை அன்றே உணர்ந்து தன் குடியிரூப்பை தன் உறவுகளுக்கு பாடசாலையாக மாற்றிய பெருந்தகை இவர். 4. சாலை பாசறையில் பூத்த மலர்கள் இன்று வையகமெங்கும் இந்த கல்வியாளரின் புகழினை பறைசாற்றுகின்றனர். இது அவர் நினைவுக்கு மற்றும் ஒரு மகுடம். 5. குழந்தை இல்லை என்ற குறை தீர்க்க தன் மனையாளோடு இணைந்து பல்லாயிரக்கணக்கான இல்லங்களில் கல்வி ஒளி ஏற்றியவர் இந்த பெருந்தகை. 6. இன்றைய சூழலில் அவர் நிழர் படத்திற்கு தீபம் ஏற்றவில்லை என்ற ஏக்கம் வேண்டாம், சட்டத்தை மதித்து வாழ்ந்த அந்த மாமனிதரின் சிந்தனை சில மணிதுளிகள் நம் மனதில் நிழலாடினால் அது நாம் அவருக்கு காணிக்கையாக்கும் நமது அஞ்சலி. அவர் மறைந்து முப்பத்துநான்கு ஆண்டுகள் ஆனாலும் சிந்திப்போம் செயல்படுவோம் அவர் ஏற்றி வைத்து தீபம் தொடர்ந்து பலர் வாழ்வில் ஒளி பரப்ப தொடர்ந்து செயல்படுவோம் என்று சபதம் ஏற்போம் இன்னாளில் - தி ஜெ ஸ்ரீதர்
|